Maasi Magam 2021

This thread came up on Twitter, posted by @anbezhil12 – Maasi Magam 2021.

மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்று கோவில்களில் இருந்து சுவாமி புறப்பட்டு கடலில் அல்லது நதியில் நீராடி திரும்புவர். இதை தீர்த்தவாரி அல்லது கடலாடி என்பார்கள். பக்தர்களும் சுவாமியுடன் ஸ்நானம் செய்து புண்ணிய பலனை அடைவர். கங்கை காவிரி ஆகிய புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் இந்நாளில் நீராடி இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் முன் ஜென்ம வினைகள் தீரும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறது சாஸ்திரம். தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். மாசி மாதம் மகம் 

நட்சத்திரத்தில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் சிவ தீட்சை பெற்ற பலனைத் தரக்கூடியது. மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தாட்சாயிணியாக அவதரித்தார். ஸ்ரீ மகாவிஷ்ணு பாதாளலோகத்தில் இருந்து பூலோகத்தை மீட்க வராக அவதாரம் எடுத்த திருநாளும் மாசி மகத்தன்று தான். 

முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானுக்கு மந்திர உபதேசம் செய்வித்ததும் இந்த மாசி மாதத்தில் தான். ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்நாளில் முருக பெருமானை வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம். 

திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமியநாராயண பெருமாள் கோவிலில் மாசி மக திருநாள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இக்கோவிலில் மாசி மக கிணறு என்னும் சிம்ம கிணறு இருக்கிறது. இதில் மக நாளில் நீராடுவது சிறப்பு. மந்திர உபதேசம் வேண்டி திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களிடம் ஸ்ரீ ராமானுஜர் 18 முறை தேடி வந்து உபதேசம் பெற்றது இங்கு தான். மாசி மகத்தன்று இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழாவில் மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற தெப்ப குளத்தில் தீபமேற்றி வழிபடுவார்கள்.

மாசி மகத்தன்று காமதகன விழா நடைபெறும். மாசி மகத் திருநாளில் நெல்லையப்பர் கோவிலில் திருநாவுக்கரசருக்கு ” அப்பர்த்தெப்பம்” என்று தெப்ப விழா நடத்துவார்கள். மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்ய உகந்த நாளா கருதப்படுகிறது.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் நீங்க மாசி மகம் மிக சிறந்த நாளாகும். இந்த நாளில் சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் சிம்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். மகம் நட்சத்திரம் என்பது கேது பகவான் அதிபதியாக வரும் நட்சத்திரம்.

இதற்கு “பித்ருதேவ நட்சத்திரம்” என்றும் பெயர் உண்டு. இந்த நாளில் புனித தீர்த்தங்களில் நீராடுவது பிதுர் மஹாஸ்நானம் என்று கூறப்படுகிறது. நீர் நிலைகளில் நீராடுவதால் நம்முடைய பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. நீர் நிலைகளில் நீராட முடியாதவர்கள் அன்று கோவில்களுக்குச் சென்று இறை தரிசனம் செய்வது நன்று.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசி மகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். சிம்ம ராசியில் குரு பகவான் மற்றும் சந்திரன் மக நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும் காலத்தில் வரும் பௌர்ணமி நாளே மகா மகம் ஆக கொண்டாடப்படுகிறது.

இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாகும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமகக் குளம் வருவதாக ஐதீகம். 

கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோவில்களிலும், 5 பெருமாள் கோவில்களிலும் மாசி மக விழா கொண்டாடப்படும். அன்று அதிகாலை 4 மணி முதல் மகா மககுளத்தில் பக்தர்கள் புனித நீராடத் தொடங்குவர். மதியம் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் மகாமக குளக்கரையில் எழுந்தருள தீர்த்தவாரி நடக்கும்.

பெருமாள் கோவில்களிலிருந்து உற்சவர் புறப்பாடும், காவிரி சக்கர படித்துறையில் தீர்த்தவாரியும் நடக்கும். மாசி மகத்தன்று தானம் வழங்குவது, பெரியோரை வணங்கி ஆசி பெறுவது, மந்திர உபதேசம் பெறுவது நற்பலனை தரும். வடநாட்டில் இதனை கும்பமேளாவாக 
கொண்டாடுகிறார்கள்.

சிவன், விஷ்ணு, முருகன்- மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாளான மாசி மக நாளில் புனித நீராடி மாசி மக புராணம் படித்து, பிதுர் கடன் செய்வதன் மூலம் நாம் முக்தியை பெற முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இன்று பார்த்தசாரதி பெருமாள் திருவல்லிக்கேணி கடற்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகிறார்

For non-Tamil readers, am translating it below –

Maasi Magam Significance

Maasi denotes the Tamil month and Magam denotes the star. The day when Poornima, Maasi month and Magam star come together, its considered very auspicious. In temples down south, the deity is taken for a dip in the sea/river or pond nearby. Devotees also take a dip on this day.

According to the Vedas, negative karma of a devotee is washed away by taking a dip in the holy rivers like Ganga or Cauvery on this day. It also helps in removing various challenges and obstacles in this life.

Three significant events took place on this day –

  1. Parvati took birth as Dakshayani.
  2. Maha Vishnu took the Varaha Avatar.
  3. Shiva’s son Murugan (or Kartik as he is known in North India) gave “Mantropadesh” to his own father. Very loosely that means, the son took the role of the father’s Guru.

Different Temples and their celebrations

  1. Thirukoshtiooru Sowmya Narayana Perumal temple – The well in this temple is famous as devotees take a dip in it on Maasi Magam day. Sri Ramanujar came to his guru “Sri Periya Nambi” 18 times for “Mantropadesham” to this temple. Devotees light a lamp and let it float in the temple pond on this day.
  2. Nellaiappar Temple, Tirunelveli – The last rites for one’s forefathers is done on this day at this temple. Its called “Appar Teppa Thiruvizha”.
  3. Kumbeswarar Temple, Kumbakonam – The most important celebration for Maasi Magam takes place in this temple. Every 12 years, this day is celebrated as Maha Magam and the celebrations are magnified at this temple. The confluence of 12 holy rivers like Yamuna, Ganga, Cauvery, Godavari, Sindhu, Saraswati, and Narmada takes place at this temple’s pond on this day. Devotees throng this temple for the Maha Magam. In 1992, Late Jayalalitha also took a dip in this temple’s pond as she is born on Maasi Magam.

Krishnan and I certainly hope to be at the Kumbeswarar temple on Maha Magam day in 2028. Coincidentally and another clear indication that India is one – Its on this same day that the Maha Snan happens at the Sangam during the Kumbh Mela. No difference between the so called Aryans and Dravidians !!


I took pictures of the full moon. Kumarika came over and we met after nearly four years. Time just flies …

Maasi Magam - Full Moon

#HinduFestivals #IndianTraditions

Leave a Reply

Discover more from 90rollsroyces

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading