In Paasuram #15 the last friend is being woken up and she is the arguing kind. So this paasuram describes the argument between young girls who are all friends. What’s an argument between friends !
As always do read Thirupaavai Paasuram #14 before reading Paasuram #15.
Click on this link to read the Paasurams and their meanings in Tamil – Thirupaavai Paadalkalum Villakamum.
Elle Ilang kiliye – Paasuram #15
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
Tamil Translation
ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, “கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், “சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்” என்கிறாள். “அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?” என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். “என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?” என்கிறாள். தோழிகள் அவளிடம், “நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய்” என்கிறார்கள்.
English Translation
Paasuram #15 is the last one where Andal and her group of friends go house to house waking up their friends. This is a beautiful song – it showcases how young girls argue amongst themselves. When they try to wake up this particular friend, she says have all the others woken up. They ask her to come out and count 🙂 and so it goes on.
This Paasuram showcases a good friendship that is unaffected by arguments. The friends fight amongst each other but get together finally.
MLV singing Thirupaavai Paasuram #15
Here’s the link to the Mp3 of Paasuram #15 on Wynk – https://wynk.in/u/0J1iSICaQ
Note
The 30 paasurams known as Thirupaavai are written by Andal and are a part of the Naalayira Divyaprabhandams (4000 verses singing the praises of Bhagwan Vishnu). For Iyengars, it’s a lifelong mission to memorise the Naalayira Divyaprabhandams and understand their meaning. These songs are written by the 12 Azhwars (saints is the closest translation possible) of whom Andal is the only female.
#Thirupaavai #Margazhi